முதல் கேள்வி
கண் விழித்த பேஷண்ட் கேட்டார், "பில் எவ்வளவு?"
*****
கால் பார்த்தல்
அடிக்கடி தன் காலைப் பார்த்துக் கொண்டே வந்தான்
மிஷ்கின் படம் பார்த்து விட்டு வந்த மிதுன்.
*****
ஏமாற்றம்
கமல் படம் பார்த்து விட்டு ஏமாற்றத்தோடு திரும்பினான்
ராகவன் முத்தக்காட்சி இல்லாததால்.
*****
ஏன் ஓடல?
"படம் நல்லாத்தானே இருக்கு! ஏன் ஓடல?"
என்றான் குமார் திருட்டு டி.வி.டி.வியல் படம் பார்த்து விட்டு.
*****
பேய்ப் படம்
டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து ஹவுஸ்புல் போர்டோடு,
இருக்கைகள் காலியாகக் கிடக்க நூறாவது நாளாக ஓடிக் கொண்டிருந்தது அந்தப் பேய்ப்படம்.
*****
No comments:
Post a Comment