ஒளிபரப்பு
விற்ற நிலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார்
விவசாயி, ரியல் எஸ்டேட் விளம்பரமாய்.
*****
முன்ஜாமீன்
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதற்கு முன்னே முன்ஜாமீன்
வாங்கியிருந்தான் அமைச்சரின் மகன்.
*****
குற்றம்
பரஸ்பரம் குற்றம் சுமத்திக் கொண்டார்கள் குற்றப்பரம்பரைக்
கதையை விவாதித்துக் கொண்டிருந்தவர்கள்.
*****
மேல்
கஞ்சி ஊத்தாத மருமகளுக்கு, தண்ணி கூட கொடுக்காத
பிரச்சாரக் கூட்டமே மேல் என்று கிளம்பினார் மாமனார் கந்தசாமி.
*****
சாவு
கிராமத்துச் சாவுக்கு சென்று வந்த பின் சிவாவுக்குப்
புரிந்தது, நகரத்துக்கு வந்து எத்தனைச் சொந்தங்களைச் சாவடித்திருக்கிறோம் என்று.
*****
No comments:
Post a Comment