8 Jan 2017

தரிசனம்


தரிசனம்
கடவுளைக் காண
வேண்டி
பல பல
கிலோ மீட்டர்கள்
தாண்டி வந்தவன்
அரை மணி நேரம்
தரிசன வரிசையில்
நிற்பதற்குள்
திட்டித் தீர்த்தான்
கடவுளை!
*****

கொடுத்தல்
"கொடுப்பதற்கு
ஒரு மனசு வேணும்!"
என்பவர்கள்
கொடுப்பதும்
கொடுக்காததும்
பையில் இருக்கும்
சில்லரைக் காசுகளைப்
பொருத்தது
என்பதை அறியாதவர்கள்.
*****

No comments:

Post a Comment