நன்றி
பணம் போதாமையால் வாங்காமல் போனவனைப் பார்த்து
நன்றி சொல்லியிருக்கக் கூடும் பிராய்லர் கோழி.
*****
சொல்
காணிக்கை முடிந்ததும் விரைவாக நகரச் சொன்னார்கள்
காணிக்கைச் செலுத்தியவனை.
*****
உறுதிப்பாடு
சுற்றுலா செல்வதாகச் சொன்ன மகளிடம் அப்பா சொன்னார்,
"மறக்காம அங்கிருந்து செல்பி எடுத்து அனுப்பு!"
*****
தகவல்
"தண்ணி வரல!" டாய்லெட்டில் அமர்ந்தபடியே
ஹவுஸ் ஓனருக்கு கால் செய்தான் பாண்டி.
*****
திருப்தி
மகன், மனைவியோடு செல்பி எடுத்துக் கொண்ட திருப்தியில்
மீண்டும் சிறைக்குச் சென்றார் பரோலில் வந்த தந்தை.
*****
No comments:
Post a Comment