7 Jan 2017

தாரும் எம் பிரியமானவரே!


தாரும் எம் பிரியமானவரே!
என் பிரியமானவரே
எம் மீதான பிரியம்
உண்மையென்றால்
நான் செய்த கொடுத்த சத்தியத்தைத்
திருப்பித் தாரும்!
நான் செய்த நன்மைகளுக்காக
எமக்குப்
பாவ மன்னிப்புத் தாரும்!
என் கன்னத்தில் அறைந்தவரை
சபியும்!
உம் முள்முடிச் சூடி
உலகாள்பவரை வாழ்த்தும்!
நான் ஏற்றி வைத்த
மெழுகுவர்த்திகளை அணைத்து விட்டு
இருளைத் தாரும்!
உம் பெயரால் அதிகம் தண்டிக்கப்பட்டு விட்ட
சாத்தானுக்கு விடுதலை தாரும்!
நீர் மிகுந்த அன்பானவர்
என்பதால் கேட்கிறேன்
நிரம்பி வழியும்
இடம் இல்லாத ப்ளாட்பாரங்களிலிருந்து
உம் சிலுவையில்
எமக்குக் கொஞ்சம் இடம் தாரும்
என்று கேட்கும்
மனிதக் கறையான்களின் கோரிக்கையை
நிராகரித்து விடாதீர்!
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...