பால் வாசம்
திருடிக் கொண்டு வந்த
பணத்தாளில்
பால்வாசம்!
பணத்தைக் கையில் வைத்துப்
பார்த்துக் கொண்டிருப்பதை
நோக்கி
வருகிறாள்
அழுகின்ற குழந்தையை
மடியில் சுமந்தபடி
பிச்சையேந்தும் பெண்ணொருத்தி!
*****
பெருவெள்ளம்
கூரைகளை நனைத்து
பெய்த மழை
மாடிகளை நனைத்து
பெய்ய,
தெரு வழி ஓடி
குளத்தில் விழுந்த நீர்
காணாமல் போன
குளத்தைத் தேடி முடியாது போக
சாக்கடையில் விழுந்து கொண்டிருக்க,
அடைப்பும் உடைப்புமாக
மழைநீர்ச் சேமிப்புக் குழாயிலிருந்து
செலவெனச் சிதறும்
மழைநீர்
ஓடியும் ஓடாமலும்
தேங்கிக் கொண்டிருக்கிறது
அந்த சிறுநகருக்கான
பெருவெள்ளமாய்!
*****
No comments:
Post a Comment