சீரியல்(ஸ்) ஆகும் ஷோக்கள்!
நடன நிகழ்ச்சிகள்,
பாடல் நிகழ்ச்சிகள்
ஆகியன இப்போதைய
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் டிரெண்டில் முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கின்றன.
மக்கள் ஆர்வமோடு பார்க்கின்றனர்.
ஆனால், மெகாசீரியலை
விட்டு அவ்வளவு விரைவில் மாறி விடுபவர்கள் அல்ல மக்கள்.
இதைப் புரிந்தே வைத்திருக்கின்றன
தொலைக்காட்சி நிறுவனங்கள்.
இதற்காகவே சீரியல் பார்த்து
எப்படி மக்கள் கண்ணீர் விடுகிறார்களோ, அதுபோல நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அவ்வபோது
அழ விடுகிறார்கள். அவ்வபோது அவர்களின் சோக அனுபவங்களைச் சொல்லச் சொல்கிறார்கள்.
மக்களும் அழ ஆரம்பித்து
விடுகிறார்கள். ஆர்வமுடன் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
சீரியல் பார்த்தாலும்
அழுகைதான். இது போல சீரியஸ் ஷோக்களைப் பார்த்தாலும் அழுகைதான். மக்கள் பார்க்காமல்
இருப்பார்களா?
இப்போது சொல்லுங்கள்!
இந்த தொலைக்காட்சி நிறுவனங்களாவது மாறுவதாவது?
*****
No comments:
Post a Comment