7 Jan 2017

அன்பின் சண்டை


சுய மரணம் செய்து கொள்ளா எண்
ஒரு தவறிய அழைப்பில்
வந்த அவர்
எத்தனையோ முறை
அழைத்தும்
தவறிக் கூட
அழைப்பில் வரவில்லை!
ஸ்விட்சுடு ஆப்
ஆகியிருக்கும்
அந்த எண்ணுக்குப் பின்
இருக்கும் ரகசியம்
ஒரு போதும்
சுயமரணம் செய்து கொள்ளாது
என்பது பாவம் அவர் அறியாதது!
*****

அன்பின் சண்டை
அம்முக்குட்டிக்கும்
அம்மாவுக்கும் சண்டை.
அம்முக்குட்டி
அம்மாவுக்குப் பிரியமான
விநாயகர் படத்தைத்
துடைத்து மாலையிட்டாள்.
அம்மா
அம்முக்குட்டிக்குப் பிடித்த
அவல் பாயாசம் செய்தாள்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...