டார்ச்
டார்ச் லைட்டை ஒரு முறைக்கு இரு முறை நன்கு பரிசோதித்து
விட்டு, கையோடு மறக்காமல் எடுத்துச் சென்றான் மணிரத்னம் படத்திற்குச் சென்ற மகேஷ்.
*****
வரி
ஒரு வரி விடாமல் வரிக்கு வரி ஊன்றி படித்துக்
கொண்டு இருந்தார், "வரி செலுத்தாமல் இருப்பது எப்படி?" என்ற புத்தகத்தை.
*****
சான்று
"ஏன் நேத்தி லீவ்?" என்று கேட்ட அதிகாரியிடம்
ஆறு மாதத்திற்கு முன் ஆஸ்பத்திரியில் எடுத்துக் கொண்ட செல்பியைக் காட்டினான் சங்கரன்.
*****
தண்டல்
பாகனைச் சுமந்து செல்வதற்காக காசு கொடுத்தனர்
நடந்து சென்றவர்கள்.
*****
மாற்று
"கடையை மூடுன வரைக்கும் நல்லது! ஊர்ல குடிச்சு
மானபங்கப் பட்டது போதும்!" என்று பைக்கை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர் டாஸ்மாக்கிற்குக்
கிளம்பினான் காத்தமுத்து.
*****
No comments:
Post a Comment