6 Jan 2017

மைண்ட வாய்ஸ்


மைண்ட வாய்ஸ்
காணாமல் போன ஆர்.சி. புக்கைக் கண்டுபிடித்ததற்காக ஐயாயிரம் அழுத மாதவன் மனதுக்குள் புலம்பிக் கொண்டான், "இதுக்கு ஆர்.சி. புக்கே இல்லாமல் நூறு  ரூபாய்லேயே சமாளிச்சுகிட்டு இருந்திருக்கலாம்!"
*****

உறுதிப்படுத்துதல்
கண்காணிப்பு கேமிராக்கள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டதும் அரிவாள்களை எடுத்தனர் கூலிப்படையினர்.
*****

ரிக்வெஸ்ட்
தான் அனுப்பிய பேஸ்புக் ரிக்வெஸ்டுக்கு சபீதாவின் அக்செப்ட் கிடைத்ததும் துப்பாக்கியோடு கிளம்பினான் ஆத்ரேயா.
*****

அப்பாவி
தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டு போலீசில் சரணடைந்தவன், குற்றவாளிக் கூண்டில் ஏறியதும் கதறினான், "நான் ஒரு அப்பாவிங்கய்யா!"
*****

கிஸ்
"ஒரே ஒரு கிஸ் கொடு!" என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் கார்த்திக், எல்.கே.ஜி. படிக்கும் தன் மாமன் மகளிடம்.
*****

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...