6 Jan 2017

ஆணிகள் நிறைந்த பெட்டி


ஆணிகள் நிறைந்த பெட்டி
இயேசுவே
உம் முள்முடி
உம் மீது அறையப்பட்ட ஆணிகள்
எமக்குப் பயத்தைத் தருகின்றன.
எம் பயத்தை நிரூபிப்பது போல
கடலோரம் ஒதுங்குகிறது
ஓர் உறைந்த ஓவியம் போல்
குழந்தையின் சடலம்!
நிர்வாணச் சிறுமி
ஓடுகிறாள்
போரின் உக்கிரம் பொறுக்காமல்!
தசை வற்றிய
எலும்புக்கூட்டுக் குழந்தையை
தூக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது
பருந்து!
நீர் ஏமாற்றி விட்டீர்!
அந்த ஆணிகளை உம்முடன்
எடுத்துச் செல்லாமல்,
அந்த முள்முடியை
எமக்குச் சூட்டிச் சிரிக்கின்றீர்!
பிரியம் நிறைந்த பிதாவே
உமக்குத் தெரியும்தானே
ஆணிகள் நிறைந்த
அந்தப் பெட்டி
இத்தனை நாள்களாக
எங்கிருந்தது என்று?!
*****

1 comment:

  1. ஓர் உறைந்த ஓவியம் போல் குழந்தையின் சடலம்..நெகிழ்ச்சி சார்

    ReplyDelete

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...