6 Jan 2017

திருடன் போலீஸ்


ஆசுவாசம்
கிடத்தி வைக்கப்பட்டிருக்கும்
பிணங்களைப் பார்க்கையில்
தனக்கானவர்கள்
யாரும் இருந்திடக் கூடாது
என்ற தவிப்பு கொல்கிறது!
தனக்கான
ஒரு முகத்தைக் கண்டதும்
ஓவென சத்தமிடும்
அலறல்
தொடர்ந்து பார்த்துக் கொண்டு
பின்னே
வந்து கொண்டிருப்பவர்களை
ஒருவாறாக ஆசுவாசப்படுத்துகிறது
தனக்கான முகம் ஒன்று
இல்லையென்று!
*****


திருடன் போலீஸ்
எலிகள் இருப்பது
பூனைகளுக்கும்,
பூனைகள் இருப்பது
எலிகளுக்கும் தெரியும்.
இரண்டும்
சந்தித்துக் கொள்ள
வாய்ப்பில்லாமலே
கழிந்து கொண்டிருக்கின்றன
இரவுகள்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...