சுத்தம்
"ஜெயில்ல
இருந்த ஆறு மாசமா தலைவர் டி.வி., பேப்பர் உள்ளிட்ட எந்த வசதியையும் பயன்படுத்திக்கல!"
என்றதும் சிரித்துக் கொண்டார் தலைவர் கையில் வைத்திருந்த மொபைலைப் பார்த்தபடி.
*****
வந்துட்டுப் போ!
"லீவ்ல
ஒரு நாள் அவசியம் வந்துட்டுப் போ!" என்ற மாமாவிடம், "ஆபீஸ் டயத்திலேயே ஒரு
ஆப் அன் ஹவர் வந்துட்டுப் போயிடுறேன்!" என்றான் நரேன்.
*****
நண்பனின் அழைப்பு!
நண்பனின்
அழைப்புதான் என்று எடுத்து பேச முடியவில்லை அவன் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் ஆகி விட்ட பின்!
*****
அமைதி
பின்
ட்ராப் சைலன்ஸில் இருந்த வகுப்பறையில் மாணவர்கள் பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும்
மேய்ந்தபடி இருக்க, ஆசிரியர் வீடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
*****
No comments:
Post a Comment