வெறுமை
அதில்
எதுவும் இல்லை
எதையாவது
நுழைக்கப் பார்க்கிறார்கள்
நுழைப்பதை
நுழைத்து விட்டு
அங்கு
எதுவும் இல்லை என்று
கற்பூரத்தை
அணைத்துச்
சத்தியம்
செய்கிறார்கள்!
*****
கனவுகள்
டாக்டர்
கனவுக்காகவும்
இன்ஜினியர்
கனவுக்காகவும்
பகலில்
இரவில்
விழித்துக்
கிடந்தவர்கள்
நிஜ கனவுக்காக
ஆசையோடு
தூங்கத் தொடங்க,
சத்தமிட்டு
எழுப்பத்
துவங்கியது
விழிக்க
வைக்கும்
அலாரம்.
*****
முடிவில்
அவர்கள்
புணர்ந்து முடித்த பின்
கீறிச்சிட்டபடியே
சுழன்று கொண்டிருந்தது
மின்விசிறி
முழுதும் நிறைவேறாக காமத்தை
உரக்கக் கத்துவது போல!
*****
No comments:
Post a Comment