பகிர்தல்
"பகிர்ந்த
துன்பம் பாதியாகும்! பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகும்!" மாறிப் போச்சுடா என்று
புலம்பினான் பேஸ்புக்கில் பகிர்ந்த நண்பன்.
*****
பாசம்
"என்
மேல உங்களுக்குப் பாசமே இல்லப்பா!" என்று அழ ஆரம்பித்தாள் லைக் போடா அப்பாவைப்
பார்த்து ஷாலு.
*****
திறந்தவெளி
"வீட்டுக்கொரு
கழிவறை கட்டணும்ங்க!" என்றவர் சங்கிலியை இழுத்துப் பிடித்த படியே நாயை சாலையோரத்துக்கு
இழுத்துச் சென்றார்.
*****
ஒன்லைன்
"அம்மன்தான்
ஹீரோ! பேய்தான் வில்லன்!" என்று ஒன்லைன் சொன்னதும் அட்வான்ஸைத் தூக்கிக் கொடுத்தார்
தயாரிப்பாளர்.
*****
தவிப்பு
இரண்டு
நாள்களாக வாட்ஸ் அப்பில் இல்லை என்றதும், பதறிக் கொண்டு கால் செய்தவர்களை எப்படிச்
சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தான் ஞானசுந்தரம்.
*****
No comments:
Post a Comment