26 Dec 2016

பீஸ்


மறுபடியும் நிரப்புதல்
"இந்த பார்மை கொஞ்சம் நிரப்பிக் கொடுப்பா!" என்றார் பள்ளிக்கூடத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மணியார்டர் எப்படி நிரப்புவது என்று அடித்துச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்.
*****

சேர்க்கை
தனியார் பள்ளியில் தன் மகனைச் சேர்த்தால் அரசுப் பள்ளி ஆசிரியர்.
*****

பீஸ்
"பிள்ளைங்க எல்லாம் பீஸ் கட்டிட்டாங்களாம்!" பகிர்ந்து கொண்டனர் பத்து தேதியாகியும் சம்பளம் வாங்காத மிஸ்கள்.
*****

விழிப்புணர்வு
"அய்யோ! என் செயினைக் காணும்!" சத்தம் வந்தவுடன் ஒவ்வொருவரும் தடவிப் பார்த்துக் கொண்டனர் தங்கள் செயின்களை.
*****

ஹெல்ப்
"நால சி-டா சம்பளம்!" என்று கிஷோர் சொன்னதும், "ஒரு பாலிசி கோட்டு ஹெல்ப் பண்ணுடா மச்சான்!" என்றான் கடன் கேட்க வந்த ராஜேஷ்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...