17 Dec 2016

ஒப்புக் கொள்ளாதவரே ஒப்பந்தக்காரர்!


ஒப்புக் கொள்ளாதவரே ஒப்பந்தக்காரர்!
            நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே 1.22 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து மாணவர் ஒருவர் பலத்த காயம் அடைந்திருக்கிறார். பள்ளியைச் சீரமைத்த ஒப்பந்தக்காரர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
            ஒப்பந்தக்காரர் என்ன சொல்வார்? சீரமைத்ததால்தான் பலத்த காயங்களுடன் மாணவர் தப்பித்தார், இல்லையென்றால் உயிரே போயிருக்கும் என்றுதானே.
            இந்த நாட்டில் ஒப்பந்தக்காரர்களைத் தண்டிக்க சட்டமில்லை. காரணம். சட்டத்தால் தண்டிக்கப்பட்ட பலர் ஒப்பந்தக்காரர்களாக இருப்பது நம் நாட்டின் தலையெழுத்து. ‍அவர்கள் ஒப்பந்தக்காரர்களாக இருப்பதற்காக, நாமே நம்மை தண்டித்துக் கொண்டால்தான் உண்டு.
*****

வங்கி லாக்கரில் 10.80 கோடி!
            இப்போதுதான் கழிவறைக்குள் கோடிகளைப் பதுக்கி ஒருவர் பிடிபட்டார். இவர் கொஞ்சம் வித்தியாசமான பேர்வழி போலும். வங்கியில் இருக்கும் வங்கி லாக்கரிலே பணத்தைப் பதுக்கியிருக்கிறார். இது தெரியாமல் நமெல்லாம் அக்கெளண்டில் பணத்தை டெபாசிட் செய்து விட்டோமே சாரே!
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...