17 Dec 2016

ஏப்ரலில் மீண்டும் வருமா பணநீக்க மதிப்பு?!


ஏப்ரலில் மீண்டும் வருமா பணநீக்க மதிப்பு?!
            இந்த பணநீக்க மதிப்பு வெள்ளையாக நாட்டில் உலவி வரும் பணத்தை மதிப்பிட ஒரு வாய்ப்பு என்பதை மறுக்க முடியாது.
            இந்தக் கருப்புப் பணத்தை நிச்சயம் ஒரு வழி பண்ணி விட முடியும். ஆனால், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலரே பணமாற்ற முறைகேடுகளில் சிக்குவதைப் பார்க்கும் போது இந்தியர்களிடம் இந்த முயற்சி செல்லாததாகி விடுமோ என்று ஐயமாக இருக்கிறது.
            இந்தப் பிரச்சனைக்கு ஒரே வழி 2000 நோட்டுகளை முழுமையாக வெளியிட்டு விட்டு, மீண்டும் ஏப்ரல் மாதம் அதையும் செல்லாது என்று அறிவிப்பதுதான். ஆனால் அந்த அறிவிப்பைத் தாங்கும் அளவிற்கு அப்போது நாடு இருக்குமா என்பது நம் தாய்நாட்டுக்கே வெளிச்சம்.
             இப்போதே 2000 நோட்டுகள் கத்தைக் கத்தையாக பதுக்கப்பட ஆரம்பித்து விட்டன. ஏழை, பாழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும்தான் புதிய பணம் கிடைக்க மாட்டேங்கிறதே, தவிர பணமுதலைகள் புதிய பணத்தை எங்கிருந்து முழுங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அதிரடி நடவடிக்கைககளில் பணம் பணமாய் கக்குகிறார்கள்.
            இவர்கள் மேலெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? அம்பானி அவர்களுக்கு விதிக்கப்பட்டது போல ரூ.500 அபராதம் விதிக்கப்படுமோ?
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...