17 Dec 2016

பேஷ்! பேஷ்! கேஷ்லேஸ் இந்தியா!


பேஷ்! பேஷ்! கேஷ்லேஸ் இந்தியா!
பிச்சைக்காரர்கள்
எப்படிப் பிச்சை எடுப்பார்கள்?
"அம்மா! தாயே!
பே.டி.எம்.ல எதாவது
போடுங்க!" என்றா?
*****
"பூட்டை உடைச்சு திருடுனியா?"
என்று கேட்கும் போலீஸ்காரர்க்கு
திருடன் சொல்வான்,
"பாஸ்வேர்டை உடைச்சு திருடுனேன்ங்கய்யா!"
*****
பத்தாவது வட்டத்தின் சார்பாக
கிரெடிட் கார்டு மாலையைத்
தலைவருக்குப் போடுவார்கள்
கட்சிக்காரர்கள்!
*****
"இ வாலட் இல்லாவிட்டால்
பிச்சைக்காரருக்கு
பிச்சைப் போட முடியாது பார்த்துக்கோ!"
கோயிலுக்குச் செல்வோர்
பர்ஸைத் தேடுவதற்குப் பதில்
செல்லைத் தேடுவார்கள்.
*****
"கேஷ்லஸ் எகனாமி மட்டும் வரலேன்னா...
நினைச்சுப் பாரு!"
"நாம இன்னும் திருவோட்டை ஏந்தித்தான்
பிச்சை எடுத்துகிட்டு இருக்கணும்!"
இப்படித்தான்  உரையாடிக் கொள்வார்கள்
பிச்சைக்காரர்கள்!
*****
"பணம் இல்லேன்னா கேளுப்பா பிச்சே!"
என்றால் விடவாப் போகிறார்கள் பிச்சைக்காரர்கள்
"பரவாயில்ல சாமி!
பி.ஓ.எஸ். மிஷின் வெச்சு இருக்கேன்!
தேய்ச்சுக்கலாம் கார்டை எடுங்க!"
என்று சொல்லப் போகிறார்கள்.
*****
"இ வாலட் இருக்கிறவங்க மட்டும்
லாரியில ஏறுங்க!"
கட்சிக் கூட்டத்துக்கு
இப்படித்தான் ஆள் பிடிப்பார்கள்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...