சொல்வதில் இருப்பது
நாம் சொல்வதில்தான்
இருக்கிறது
சைக்கிளில் போய் விட்டு
காரில் போவதை
உழைப்பு என்பதும்,
காரில் போய் விட்டு
சைக்கிளில் போவதை
எளிமை என்பதும்!
*****
எளிமையான கொண்டாட்டங்கள்
பெருவசூல் செய்து
கட் அவுட்டுகள் வைத்து
பாலாபிஷேகம் செய்து
சரவெடிகள் வெடித்து
பூக்கள் தூவி
ஜிகினாக்கள் சிதற
டிராபிக்கை மறைத்து
தெருவடைத்து
ஒவ்வொரு வருடமும்
கொண்டாடுவோம்
எளிமையான
எங்கள் தலைவனின்
பிறந்த நாளை!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment