சொல்லுங்கண்ணே! சொல்லுங்கண்ணே!
ஒரு
ஏ.டி.எம். மிஷின் என்ன விலை இருக்கும்?
ஏ.டி.எம்.
அருகில் வீட்டுமனைகள்னு எப்போது விளம்பரம் வரும்?
கள்ள
நோட்டுக்காரனுங்களே பரவாயில்லை! பாதிக்குப் பாதி பணம் கொடுப்பானுங்களாமே?
ஒரு
ஆட்டுக்குட்டியின் மீது வண்டியை விட்டு விட்டால் கூடும் கூட்டத்தில் நூறில் ஒரு பங்குக்
கூட, ஏன் பேங்க் வரிசையில் செத்து விழுபவர்க்கு கூட மாட்டேங்கிறது?
ஒவ்வொரு
ஏ.டி.எம். அருகில் ஏன் ஒரு ஐ.சி.யு. அமைக்கக் கூடாதா? (செத்து விழுகிறார்களே பாஸ்!)
ஏ.டி.எம்.
என்பது ஆட்டோமேடட் டெல்லர் மிஷினா? ஆட்டோமேடேட் கில்லர் மிஷினா?
சாகப்
போறேன் என்று அடிக்கடி மிரட்டிக் கொண்டிருக்கும் நண்பன் ஒருத்தனை ஏ.டி.எம்.இல் வரிசையில்
நிற்க வைக்கலாமா?
*****
No comments:
Post a Comment