அக்கெளண்டிற்கு எட்டியது கைக்கு எட்டவில்லை!
ஏ.டி.எம்., மற்றும்
வங்கியில் எடுக்க பண அளவை எப்போது உயர்த்தப் போகிறார்களோ தெரியாது! பெட்ரோல் விலையை
உயர்த்தி விட்டார்கள்!
அப்புறம், இந்த அரசாங்க
வங்கிகள் அரசாங்கத்துக்கு இவ்வளவு விசுவாசமாக செயல்படக் கூடாது. அரசாங்கமே வாரத்துக்கு
24,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தும் மாதம் பத்தாயிரம் வரை கூட
பணம் எடுக்க முடியாத அளவுக்கு அரசாங்க வங்கிகள் செயல்படுகின்றன. காரணம் கேட்டால் இருப்பை
அனுசரித்துப் பணம் கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால் செலவுகள் இருப்பை அனுசரித்தா
வருகிறது?
தனியார் வங்கிகள் இந்த
விசயத்தில் தாராளமயம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பதை புரிய வைத்து விட்டார்கள்.
வாரத்துக்கு 24,000 ஐத் தாண்டியும் தர தயாராக இருக்கிறார்கள். ஆனால் அரசின் விதிகள்
அவர்களை அனுமதிக்கவில்லை.
இதிலும் ஒரு விளக்கம்
சொல்லப்படுகிறது. அரசாங்க வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அதிகம். தனியார் வங்கிகளில்
வாடிக்கையாளர்கள் குறைவு என்று.
இப்படித்தான் அரசுப்
பள்ளிகளைத் தரம் தாழ்த்தி தனியார் பள்ளிகளை நோக்கி ஓட வைத்தார்கள். அஞ்சலகத்தை சுணங்க
வைத்து தனியார் கூரியர் நிறுவனங்களை வளர்த்து விட்டார்கள். அரசுப் பேருந்துகளைத் தவிர்த்து
விட்டு தனியார் பேருந்துகளை நாட வைத்தார்கள். இப்போது அரசாங்க வங்கிகளைத் தவிர்த்து
விட்டு தனியார் வங்கிகளை நோக்கி விரையுங்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.
கைக்கு எட்டியது வாய்க்கு
எட்டவில்லை என்று சொல்வார்களே! அனுபவித்து சொல்லியிருக்கிறார்கள் மக்களே! அதுதான்
பழமொழி! அக்கெளண்டில் பணம் இருந்தும், கைக்கு எட்டவில்லை! இது புதுமொழி.
*****
No comments:
Post a Comment