16 Dec 2016

பணமில்லா பொருளாதாரம் - சில கேள்விகள்?!


பணமில்லா பொருளாதாரம் - சில கேள்விகள்?!
            எல்லாவற்றிற்கும் அமெரிக்காவை உதாரணம் காட்டுபவர்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது!
            ஆனானப்பட்ட அமெரிக்காவே பணமில்லா பொருளாதாரத்துக்கு மாறவில்லை. இன்னும் டாலர் நோட்டுகளை அச்சடித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?
            அமெரிக்காவே நூறு டாலர் என்ற அளவைத் தாண்டி நோட்டு அச்சடிக்கவில்லை என்னும் போது இங்கு மட்டும் ஏன் ரெண்டாயிரம் வரை போகிறார்கள்?
            தங்கத்திற்கு கள்ளத் தங்கம் வராது. பணத்திற்கு மட்டும் கள்ளப் பணம் வந்து விடுகிறது. 2000 ரூபாய் நோட்டை 5 ரூபாயில் அடித்து விட முடியும் என்றால் அப்படித்தானே நிகழும்?
            பணம் என்பது பொருளாதாரப் புழக்கத்தை எளிதாக்கத்தான். அதைச் சிக்கலாக்க அல்ல.
            அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களே ஹேக்கர்களின் கையில் படாத பாடு படும் போது, நெட் பேங்கிங், இ வாலட், மொபைல் பேங்கிங் இவைகளில் எல்லாம் புகுந்து விளையாட அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? தவிரவும் அதிலும் அவர்கள் ஒரு கள்ள நெட் பேங்கிங், கள்ள இ வாலட், கள்ள மொபைல் பேங்கிங் இவைகளை உருவாக்க அவர்களுக்குத் தெரியாதா? கள்ளத்தனம் பண்ணணும்னு முடிவு பண்ணவன் அதை எந்த வடிவிலும் பண்ணுவான்!
            சட்டங்களைப் பின்பற்றுவதற்கும், அதை மதிப்பதற்கும் நாம் இன்னும் பயிற்சியளிக்கப்படவில்லை. மாறாக அதை மீறுவதற்கும், அதை வளைத்துக் கொள்வதற்குமே பழகியிருக்கிறோம்.
            பெருந்தலைகள்தான் இப்படி நம்மைப் பழக்கியிருக்கின்றன, பழக்கி வருகின்றன.
            அவர்கள் சட்டத்தை மதித்து, பின்பற்றி, கீழே உள்ள அதிகார மட்டங்களுக்கு அவ்வாறே ஆணையிட்டு ஓம்புவார்களானால் நிலைமை தானாக சரியாகி விடும்.
            செய்வார்களா? அவர்கள் செய்வார்களா?
            செய்ய மாட்டார்கள்! அதனால்தான் காமராஜருக்குப் பின் பெருந்தலைகள் உருவானார்கள். பெருந்தலைவர்கள் உருவாகவில்லை.
            இவைகளெல்லாம் பணமில்லா பொருளாதாரத்திற்கு எதிரான கருத்துகள் அல்ல. அடிப்படையில் இருக்கும் நம் தவறுகளைப் புரிந்து கொள்ளத்தான்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...