19 Dec 2016

கதைகளின் பிராயணங்கள்


செகண்ட் ஷோக்களின் காலம்
செகண்ட் ஷோ சினிமா
பார்த்து வந்ததற்காய்
ஏக வசனத்தில்
திட்டிய அப்பாக்கள் பலரும்
இன்று
செகண்ட் ஷோக்களுக்கான
நேரம் கடந்த பிறகும்
பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்
தொலைக்காட்சிப் பெட்டியில்
மெகா சீரியல்களை!
*****

கதைகளின் பிராயணங்கள்
ஏழு கடல்
ஏழு மலை
எப்படித் தாண்டுவது
என்றவுடன்
"இதோ இப்படித்தான்!" என்று
உட்கார்ந்த படியே தாண்டி
அதே இடத்தில் உட்கார்ந்து
கொள்கிறாள்
அம்முக்குட்டி!
மீண்டும்
ஏழு கடல்
ஏழு மலை
தாண்டிப்
பிரயாணிக்கிறது கதை!
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...