குறைந்த அளவு நோட்டுகள்
குறைந்த
அளவு நோட்டுகள்தான் (ரூபாய் நோட்டுகள்) அச்சடிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்
நிதியமைச்சர் அவர்கள்.
விலைவாசி
குறைப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் என்று அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தால்
இப்படி அறிவிப்பு வருகிறது.
ஏற்கனவே
இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை விட ரெண்டாயிரம் நோட்டு அளவு குறைந்ததாகத்தான் இருக்கிறது.
ஆயிரம்
நோட்டுக்குப் பதில் ரெண்டாயிரம் நோட்டுகளாக அடித்துத் தள்ளுவதால் அது எண்ணிக்கையில்
குறைவாகத்தான் வரும்.
இதில்
எந்தக் குறைவைச் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.
முதலில்
போதுமான நோட்டுகள் தயார் நிலையில் இருக்கிறது என்று ராணுவ விமானத்தையெல்லாம் தயார்
செய்தார்கள்.
பிறகு
நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன, நிலைமை விரைவில் சீராகும், பொறுமை
காக்க வேண்டும் என்றார்கள்.
இப்போது
குறைந்த அளவு நோட்டுகள்தான் அச்சடிக்கப்படும் என்கிறார்கள்.
நோட்டுகளே
அச்சடிக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை போலும்.
*****
No comments:
Post a Comment