ஆசிட்
சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அம்முக்குட்டிக்கு ஓர் ஆசை முத்தம்
கொடுத்து விட்டு, தன்னைக் காதலிக்காத
அனிதாவின் முகத்தில் ஆசிட் வீச சென்று கொண்டிருந்தான் கதிரவன்.
*****
பெஸ்ட் பிரண்ட்
"செத்தான்டா சங்கரு!" சங்கரின்
இமெயிலை ஹேக் செய்து, அதிலிருந்து ஆபாச மெயிலை அவனது லேடி பாஸூக்கு
அனுப்பினான் குமார்.
*****
எஸ்.எம்.எஸ்.
"அதானே பிரேக் அப் ஆயிடுச்சுல்ல! அப்புறம் ஏண்டா எஸ்.எம்.எஸ்.
பண்றே?" என்று செல்லை வைத்தவள் அடிக்கடி பார்த்துக்
கொண்டிருந்தாள், ஏதேனும் எஸ்.எம்.எஸ். வருகிறதா என்று.
*****
No comments:
Post a Comment