12 Nov 2016

புலம் பெயர்வுக்குப் பின்


புலம் பெயர்வுக்குப் பின்
வேலிச் சண்டையில்
அடித்துக் கொண்டு
பின்னொரு காலத்தில்
நகரத்திற்குப் புலம் பெயர்ந்த
ராமசாமியும்
செண்பகமூர்த்தியும்
ஓர் அறை எடுத்துப்
பகிர்ந்து கொள்கிறார்கள்
வாடகையை!
*****

காசெனும் கடவுள்
காசேதான் கடவுளடா
சிறப்பு தரிசனம்
500/- ரூபாய்!
*****

தாகம் பொறுத்தல்
மிகு தாகத்தைப்
பொறுத்துக் கொள்கிறான்
நவநாகரிக யுவன்
மினரல் வாட்டர் கிடைக்காத
பிரதேசத்தில்!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...