13 Nov 2016

காஷ்மோரா


காஷ்மோரா
            பேய்ப்படப் பாணியைச் சற்று திசை மாற்றி பில்லி சூன்யம் வரை கொண்டு சென்றிருப்பதில் காஷ்மோரா திரைப்படம்தமிழ்த் திரைப்பட உலகிற்கு தன் முக்கியமான பங்களிப்பைத்  தந்திருக்கிறது. இந்த விசயத்தில் இனிமேல் கேரள மந்திரவாதிகளின் ஆதிக்கம் தொடர முடியாது என்றே நினைக்கிறேன்.
            மண்டை முடியை மழித்து, தாடி வளர்த்த கார்த்தி கெட்டப் சூப்பர். வழக்கமாக முகமுடியை (முகத்தில் வளரும் முடி) மழித்து, மண்டை முடியை வளர்க்கும் நமக்கு இதில் ஒரு முக்கியமான விசயம் அடங்கியிருக்கிறது. குறிப்பாக முடி உதிரும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கெட்டப் ஒரு நல்ல தீர்வைத் தரும் என்றே நம்புகிறேன்.
*****
பெருசுகளுக்கு சிறுசாய் ஒரு கேள்வி!
            அம்மியில அரைக்கிற மாதிரி வருமா? குடக்கல்லில (ஆட்டுக்கல் - ஆடு கட்டும் கல் அல்ல, அரிசி மாவு மற்றும் உழுந்து மாவு அரைக்கப் பயன்படுத்தும் மாவரைக்கும் கல்) அரைக்கிற மாதிரி வருமா? என்று கேட்கும் பெரிசுகளைப் பார்க்கும் போது கேட்க நமக்கும் சில கேள்விகள் இருக்கின்றன.
            ஏம்பா, அந்தக் காலத்தில் ஏர் உழுதுதானே விவசாயம் செய்தார்கள்! நீங்கள் டிராக்டரில் உழுகிறீர்களே? மண்வெட்டி, கடப்பாரையைக் கொண்டுதானே நிலத்தைத் தோண்டினார்கள்! நீங்கள் பொக்லைன் வைத்து தோண்டுகிறீர்களே? ஏற்றம் வைத்துதானே நீர் இறைத்தார்கள். நீங்கள் பம்புசெட் வைத்து நீர் இறைக்கிறீர்களே? கையாலும், காளை மாடுகளைக் கொண்டும்தானே போர் அடித்தார்கள்! அறுவடை இயந்திரம் கொண்டு போர் அடிக்கவில்லையே!
            பெண்களை இப்படி பழைய சனாதனத்தைச் சொல்லி வேலை வாங்குவதில் ஆணினத்துக்கு அப்படி ஒரு குஷி!
            ஆனால், சும்மா சொல்லக் கூடாது, அம்மியில் அரைக்கும் சட்னி சுவையாகத்தான் இருக்கிறது. குடக்கல்லில் ஆட்டும் மாவு அருமையாகத்தான் இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...