டிகிரி – ஒரு கோல்டன் டிக்கெட் மாரத்தான்!
யுனிவர்சிட்டி என்றால் என்ன?
பழைய காலத்தில் ஹம்போல்டியன் என்று ஒரு மாடல் இருந்தது. அதாவது, அங்கே படிப்பு
என்பதை விட ஆராய்ச்சி தான் மெயின். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து புதுசு புதுசாக
எதையாவது கண்டுபிடிப்பார்கள்.
அப்புறம் நெப்போலியன் வந்தான்.
அவனுக்குத் தேவைப்பட்டது ஸ்கில்டு ஒர்க்கர்ஸ். அரசாங்கத்துக்கும் மிலிட்டரிக்கும்
வேலை பார்க்க ஆட்கள் வேண்டும், அதனால் கல்வி என்பது ஒரு பயிற்சி மையமாக மாறியது.
இன்றைய மாடல் என்ன தெரியுமா?
அமெரிக்கன் மாடல். இது ஒரு காக்டெய்ல். கொஞ்சம் ஆராய்ச்சி, கொஞ்சம் பர்சனாலிட்டி
டெவலப்மென்ட், நிறைய மார்க்கெட்டிங்!
இப்போது யுனிவர்சிட்டிகள் அகாடமிகளின்
அங்காடித் தெரு போலச் செயல்படுகின்றன. ஒரு காலத்தில் டிகிரி என்பது நடுத்தர
வர்க்கத்தின் கோல்டன் டிக்கெட். டிகிரி இருந்தால் வேலை உறுதி, வாழ்க்கை செட்டில்.
ஆனால், இப்போது அந்த டிக்கெட்டின் விலை எகிறிவிட்டது, டிக்கெட் கொடுக்கும் இடமோ
காலியாகிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் 2010க்குப்
பிறகு உள்நாட்டு மாணவர்கள் கல்லூரிகளுக்குப் போவது குறைந்துவிட்டது. அதற்குக்
காரணங்கள் இருக்கின்றன.
முதல் காரணம் பீஸ். இது
படிப்புச் செலவா அல்லது பட்ஜெட் தாக்கல் செய்யும் தொகையா என்று சந்தேகம் வரும்
அளவுக்கு உயர்ந்துவிட்டது.
இரண்டாவது காரணம் லோன். படித்து
முடிப்பதற்குள் மாணவன் ஒரு நடமாடும் கடன் அட்டையாக மாறிவிடுகிறான்.
மூன்றாவது காரணம் வேலை. டிகிரி
வாங்கிய பின் கிடைக்கும் வேலையை விட, டிகிரி இல்லாமலே செய்யும் வேலைகளில் வருமானம்
அதிகம் என்ற நிலை.
இப்போது கல்வி என்பது ஒரு
பொருள். ஆசிரியர்கள் ஒரு புரொடியூசர். மாணவர்கள் கன்ஸ்யூமர். யுனிவர்சிட்டி ஒரு
கார்ப்பரேட்.
ஒரு சிலபஸை ரெடி பண்ணி, அதை
சின்னச் சின்ன மாட்யூல்ஸாக உடைத்து, காப்புரிமை வாங்கி, மார்க்கெட்டில்
விற்கிறார்கள். இதில் ஆசிரியர்களுக்குச் சுதந்திரம் கிடையாது. அவர்கள் இப்போது
பர்ன் அவுட் ஸ்டேஜில் நிற்கிறார்கள். அவர்கள் பாடம் நடத்துவதை விட, பண்டு
திரட்டுவதிலும், மேனேஜ்மென்ட் வேலையிலுமே பிஸியாக இருக்கிறார்கள்.
அறிவியல் என்பது தேடல்
என்பார்கள். ஆனால் இன்று அறிவியல் என்பது யாருக்கு விற்கலாம்? என்கிற வியாபாரம்.
அத்துடன் டிகிரி
வாங்கியவர்கள் தங்களை மேதாவிகளாகவும், வாங்காதவர்களை டம்மிகளாகவும் பார்க்கும் ஒரு
கலாசாரப் பிளவு உருவாகிவிட்டது. ஆனால் வேடிக்கை என்னவென்றால், இப்போது கிளெரிக்கல்
வேலை பார்ப்பவர்களில் 20 சதவீத பேர் டிகிரி வைத்திருப்பவர்கள். அதாவது, கல்வி
அதிகமாகிவிட்டது, ஆனால் வேலைகளின் தரம் அங்கேயே நிற்கிறது.
இந்தியாவில் கதை கொஞ்சம்
வேறு. இங்கே இன்னும் டிகிரிக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் பண்ட் மட்டும் இல்லை.
அரசு கொடுக்கும் மானியம்
33.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
யுஜிசி பட்ஜெட்டில் 60
சதவீதம் கத்தரி போட்டுவிட்டார்கள்.
வருடத்துக்கு 1000 காலேஜ்கள்
புதிதாகத் தொடங்கப்படுகின்றன. கொடுமை என்னவென்றால், அதில் 80 சதவீதம் பிரைவேட்!
இந்தியாவில் மாஸ் எஜுகேஷன்
என்பது 1970களில் ஆரம்பித்து விட்டது. ஆனால் அது தரமானதா என்பதுதான் மில்லியன்
டாலர் கேள்வி.
யுனிவர்சிட்டிகள் இப்போது
அறிவை வளர்க்கும் இடங்கள் அல்ல, சந்தைக்குத் தேவையான சப்ளையை கொடுக்கும் இடங்கள்.
இந்த ஓட்டத்தில் தொலைந்து போவது மாணவர்களின் கனவுகளும், ஆசிரியர்களின்
சுயாட்சியும்தான். கல்வி என்பது மனிதனைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் இன்று
அது மாணவர்களைச் சம்பாதிக்க வைக்கவே தடுமாற்றத்தில் தள்ளாடுகிறது.
*****

No comments:
Post a Comment