4 Jan 2026

வன்மத்தின் உறக்கம்

வன்மத்தின் உறக்கம்

இரவுப் பொழுதுகளில்

நீ

உண்மையாக இருக்கிறாய்

நடிக்காமல்

பொய் சொல்லாமல்

ஏமாற்றாமல்

பரிகசிக்காமல்

வெறுக்காமல்

எரிச்சல் மூட்டாமல்

ஏனென்றால் அப்போது

நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய்

இந்த இரவுப் பொழுதில்

என் பிரார்த்தனை

நீ விழித்தெழாமல் இருக்க வேண்டும்

விழித்தெழிந்து விட்டால்

எதையெல்லாம் செய்யாமல்

நல்லவனாக உறங்கிக் கொண்டு இருக்கிறாயோ

அதையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவாய்

*****

No comments:

Post a Comment