6 Jul 2018

ஒழுங்கற்றதில் உருவாகும் ஒழுங்கு


ஒழுங்கற்றதில் உருவாகும் ஒழுங்கு
வரிசை மாற்றிப் போட்டு விடுவதாக
சொற்களிடம் கோபப்படுகின்றன எழுத்துகள்
தங்களையும் எழுத்துகள் போல செய்து விடுவதாக
வாக்கியங்களிடம் கோபப்படுகின்றன சொற்கள்
அவ்வாறே தங்களையும் செய்து விடுவதாக
பத்திகளிடம் கோபப்படுகின்ற வாக்கியங்கள்
அப்படியே கட்டுரைகளிடம் கோபப்படுகின்றன பத்திகள்
சொற்களின் ஒழுங்கு எழுத்துகளுக்கு
வாக்கியங்களின் ஒழுங்கு சொற்களுக்கு
பத்திகளின் ஒழுங்கு வாக்கியங்களுக்கு
கட்டுரைகளின் ஒழுங்கு பத்திகளுக்கு
அவரவர் எதிர்பார்க்கும் ஒழுங்க
இன்னொருவருக்கு வேறாக இருப்பது போல
வேறு வேறாக இருக்கலாம்
வரிசை மாறிய எழுத்துகளில் உருவாகும்
சொல்லுக்கானப் பொருள் இருக்கவே செய்கிறது
எழுத்துகளின் ஒழுங்கில் உருவாவதில்லை சொற்கள்
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...