அநேகக் கீற்றுகள்
மெல்லிய வலியைச்
சொல்லும்
மெளனத்திடம்
ஒலியில்லை
இந்த வாழ்க்கை
இப்படித்தான்
சுமந்து கொண்டு
விலைவாசியையும்
தலையில் ஏந்தி
சும்மாடு இல்லாமல்
சும்மா கடந்து
போக வேண்டும்
ஒரு நம்பிக்கைக்
கீறல்
இங்கு மின்னல்
போல
தொலைவில்
தோன்றிய பொழுதில்
மறைந்து விடும்
அநேகக் கீற்றுகளைப்
பார்த்து விடலாம்
அறுபது ஆண்டுகளுக்கிடையில்
*****
No comments:
Post a Comment