தடம் மாறும் பேருந்துகள்
பேருந்துப் பயணம் செய்பவர்களின் தேர்வு
பெரும்பாலும் தனியார் பேருந்துகளாக இருப்பதைக் கவனித்தால் அவர்கள் அரசுப் பேருந்துகளின்
மீது வைத்துள்ள எதிர்மறையான கருத்துகள் புலப்படும்.
அரசுப் பேருந்துகள் மெதுவாகச் செல்கின்றன,
தூய்மையற்ற நிலையில் இயக்கப்படுகின்றன, சில்லரையாகத் தரா விட்டால் கடுமையாக ஏச்சுகளைச்
சுமக்க வைக்கின்றன, இருக்கைகளில் எங்கேனும் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகள் ஆடைகளைச்
சிக்க வைத்து கிழிக்க வைத்து விடுகின்றன என்று இப்படி நிறைய குற்றச்சாட்டுகள் ஒவ்வொருவர்
மனதிலும் இருக்கின்றன.
இதையும் மீறி அரசுப் பேருந்துகளில் ஏறும்
கூட்டம் என்பது வேறு வழியில்லாமல் ஏறும் கூட்டமாகவும், அந்த வழித்தடத்தில் தனியார்
பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஏறும் கூட்டமாகவும்தான் இருக்கின்றன.
அரசுப் பேருந்துகளின் பராமரிப்புக் குறித்து
அப்பேருந்துகளை இயக்கும் பணியாளர்களுக்கே மனம் ஒவ்வாத கருத்துகள் உண்டு. குறிப்பிட்ட
வேகத்திற்கு மேல் அப்பேருந்துகளை இயக்கும் போது அவைகள் கட்டுபாடு இழந்து விடும் நிலையை
அவர்கள் வேதனையோடு குறிப்பிடுவதும் உண்டு.
இவைகள் எல்லாவற்றயைும் தாண்டி அரசுப் பேருந்துகள்
பாதுகாப்பான பயணத்தை உறுதிபடுத்துகின்றன, தனியார் பேருந்துகளைப் போல் திடீர் திடீர்
என்று போடும் சடன் பிரேக்குகள் இல்லாமல் இலகுவாகப்
பயணிக்க உதவுகின்றன என்ற அதன் மறுபக்க நேர்மறையான கருத்துகளும் பொதுமக்கள் மனதில்
இருக்கவே செய்கின்றன.
சென்னை போன்ற நீண்ட தூரப் பயணங்களுக்கு
அரசுப் பேருந்துகள் மீது மக்கள் வைத்துள்ள தணியாத நம்பிக்கை, குறுகிய தூரப் பயணங்களுக்கான
அரசுப் பேருந்துகள் மீதும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
ஆக, இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதும்,
கருத்தில் கொள்ளப்பட வேண்டியதும் என்னவென்றால்,
அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுவதிலும்,
நிர்வகிப்படுவதிலும் நேர்மையான நேர்மறையான மாற்றங்களைச் சந்திக்க வேண்டும் என்பதுதான்.
ஒருவர் கொள்ளையிட ஓர் ஊரைப் பலி கொடுப்பதுவோ?
கூடாது என்றால் இதே வாதம் அரசுப் பேருந்துகளைப் பராமரிப்பிதிலும், நிர்வகிப்பதிலும்
பொருந்தும்.
*****
No comments:
Post a Comment