ஒரு பதில் பிறப்பதற்கான வழி
உங்கள் எல்லா
சந்தேகங்களுக்கும் ஒரே பதில்
துணிச்சல்
என்பதுதான்.
உங்கள் குரலைக்
கேளுங்கள்.
ஒவ்வொரு தொண்டைக்கும்
ஒரு தனித்தக் குரல் உண்டு
மிமிக்ரி செய்பவர்கள்
வேடிக்கை செய்கிறார்கள்
உங்கள் வாழ்க்கை
உங்களுக்கு வேடிக்கை என்றால்
தாரளமாக மிமிக்ரி
செய்யுங்கள்
அதற்கு முன்
உங்கள் தனித்தக் குரலைக் கேளுங்கள்
நீங்கள் யாரென்று
உங்களுக்குப் புரியும்
உங்கள் துணிச்சலுக்கு
அதுவொன்றே வழி
*****
No comments:
Post a Comment