உதவியாளரே எங்கே இருக்கிறீர்?!
எஸ்.கே.வுக்கு ஒரு உதவியாளர் தேவைப்படுகிறான்.
அவனுக்குத் துணைக்கு யாரும் இல்லை என்பது போலத் தோன்றுகிறது.
அவனே காகிதத்தை வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அவனே காகிதத்தைப் புரட்டி எழுத வேண்டியிருக்கிறது. எழுதுவதில் ஏதேனும் பிழை என்றாலும்
அவனே ரப்பரை எடுத்து அழிக்கவோ, அல்லது ஒயிட்னரை வைத்து நீக்கவோ வேண்டியிருக்கிறது.
தாள்களை இணைத்து ஸ்டேப்ளர் அடிப்பதையும்
அவனே செய்ய வேண்டியிருக்கிறது. சமயங்களில் பின் தீர்ந்து விட்டால், ஸ்டேப்ளருக்குப்
பின் எடுத்துத் தரவும் ஆளில்லை.
கம் எடுத்துத் தர ஆளில்லாத நாட்களில் எச்சிலால்
கவரை ஒட்டி சமாளித்துக் கொள்கிறான் எஸ்.கே. சமயங்களில் நாக்கு உலர்ந்து விட்டால் ஒரு
வாய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரவும் ஆளில்லை.
யார் எஸ்.கே.வுக்கு உதவியாளரை ஏற்பாடு
செய்து தரப் போகிறார்கள்? அவன் தன் சாமர்த்தியத்தால் ஏற்பாடு செய்துக் கொண்டால்தான்.
அது இருந்தால் எஸ்.கே. ஏன் எழுத்தாளனாக ஆகியிருக்கப் போகிறான்?!
*****
No comments:
Post a Comment