நம்மிடையே உலாவும் மனிதர்கள்!
எஸ்.கே.விடம் ஒரு விசயத்தைச் சொல்ல முடியவில்லை.
உடனே எதிர்மறையாக ஒன்றைக் கூறி மனதைச் சலனமடையச் செய்து விடுகிறான்.
எம்.கே. அதற்கும் மேல். எப்போதும் எதிர்மறையிலேயே
உழன்று கொண்டிருப்பவன்.
இவர்கள் இருவரிடமும் ஒரு விசயத்தைச் சொல்வதை
விட சொல்லாமல் இருப்பது மேலானது என்று நினைக்கிறேன். ஒரு விசயத்தை இவர்களிடம் சொல்லி
அதனால் வரும் இக்கட்டுகளை நினைக்கும் போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒவ்வொருவரும் அவரவர்களின் மனநிலைக்காக
எதையும் வளைக்கத் தயாராக இருக்கிறார்கள். இதற்காக சுயநலத்தைப் பொதுநலம் போல பேசவும்
அவர்கள் தயங்குவதில்லை.
இவர்கள் போன்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை நீங்கள் உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். அது உத்தமம்.
மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்றால்...
செய்வதைப் போல ஆசை காட்டுவார்களே தவிர, செய்ய மாட்டார்கள். அதை உங்களுக்கு செய்து
அவர்களுக்கு ஆகப் போவது என்ன? அப்படியெல்லாம் கணக்குப் போடுபவர்கள்தான் மனிதர்கள்.
எஸ்.கே.வையும், எம்.கே.வையும் திட்டாதீர்கள்.
அவர்களும் மனிதர்கள்தானே!
*****
No comments:
Post a Comment