உபசரிப்பு
தன்னைச் சந்திக்க வந்தவர்களைப் பக்கத்து
கடையில் டீ வாங்கிக் கொடுத்து அனுப்பி விட்டு வந்தார் டீ மாஸ்டர் தங்கராஜ்.
*****
தீர்வு
"ப்ளாஸ்டிக் அரிசி பிரச்சனை தீர்ற
வரைக்கும் ஆட்டா மாவுலேயே எல்லாத்தையும் பார்த்துப்போம்!" ராகிணி சொல்ல தலையாட்டிக்
கொண்டான் ராகவன்.
*****
ஆயாசம்
பேஸ்புக்கில் ஏகப்பட்ட லைக்ஸ் விழுந்த
பாயாசம் மறுநாள் வரை மீந்து கிடந்தது.
*****
No comments:
Post a Comment