23 Jul 2017

மீட்கப் பட வேண்டிய குழந்தைத் தொழிலாளர்கள்

மீட்கப் பட வேண்டிய குழந்தைத் தொழிலாளர்கள்
            படித்து விட்டு வேலைக்குப் போகும் காலம் மலையேறி விட்டது. படிப்பையே ஒரு வேலை போல் செய்தால்தான் வேலை கிடைக்கும் என்ற காலம் வந்து விட்டது.
            படிக்கும் காலத்தில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் என்கிறார்கள். குழந்தைகள் படிக்கப் போவதைப் பார்த்தால் அவர்கள் படிப்பெனும் வேலைக்குப் போவதைப் போல்தான் சூழ்நிலை இருக்கிறது.
            பள்ளிகளில் மனப்பாடம் எனும் வேலையைச் செய்து ஓய்ந்து போகிறார்கள் குழந்தைகள். மாலையில் வீடு திரும்பும் எந்தக் குழந்தையின் முகத்திலும் படித்ததற்கான மகிழ்ச்சி தெரியவில்லை. வேலையிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சிதான் தெரிகிறது.
            திங்கள் தொடங்கி சனி வரை வேலைக்குச் சென்று ஞாயிறு மட்டும் ஓய்வு கொள்ளும் வேலைப்பளு மிக்க மனிதர்களின் மனநிலையைக் குழந்தைகள் அடைய ஆரம்பித்து விட்டார்கள்.
            பள்ளிக்குச் செல்லும் இந்தக் குழந்தைத் தொழிலாளர்களை அரசியலமைப்பின் எந்த பிரிவின் கீழ் மீட்கப் போகிறோம்?
            ஆலைகள் தொழிலாளர்களைப் பிழிந்து எடுப்பதைப் போல, பள்ளிகள் குழந்தைகளைப் பிழிந்தெடுக்க ஆரம்பித்து விட்டன. ஆலைகளின் கேட்கும் இயந்திரப் சப்தம் போல், பள்ளிகளில் குழந்தைகளின் மனப்பாடச் சத்தம் உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா இல்லையா?

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...