இருப்பு
நான்கு மணல் குவாரிகள் இருந்த அந்த ஊரில்
ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது.
*****
மாற்றம்
"முன்னாடி அமைச்சரவை மாற்றத்தைப்
பேசிகிட்டு இருந்தாங்க, இப்போ ஆட்சி மாற்றத்தைப் பற்றி பேசிகிட்டு இருக்காங்க! அவ்வளவுதாங்க
பாலிடிக்ஸ்!" என்றார் நான்காவது முறையாக டீக்கடையை மாற்றிய கோவிந்தசாமி.
*****
தெளிவு
மொபைல் ஸ்டோரோடு பிரிபேய்ட் மற்றம்
போஸ்ட் பேய்ட் டீலர் எடுத்திருந்த கார்த்திக்கின் வீட்டில் அனைவருக்குமாக ஒரு லேண்ட்லைன்
மட்டும் இருந்தது.
*****
No comments:
Post a Comment