11 Jul 2017

கண்காணிப்பு


கண்காணிப்பு
நகரெங்கும்
கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கின்றன
ப்ளாட்பாரத்தில் படுத்திருப்பவர்களின் மேல்
கார்கள் ஏறுகின்றன
அங்கு படுத்திருக்கும் பெண்ணின்
கற்பு சூறையாடப்படுகிறது
பிச்சைக்காரர்களின் உடைமைகள்
களவு போகின்றன
பெரும் சத்தத்தை எழுப்பியவாறே
காவலர்களின் வாகனங்கள்
ரோந்து போகின்றன
நகரெங்கும்
கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கின்றன
*****

No comments:

Post a Comment