10 Jul 2017

கிலி பிடித்த எஸ்.கே.


கிலி பிடித்த எஸ்.கே.
            எஸ்.கே. தன் மகனுக்கு வாங்கிக் கொடுத்த விளையாட்டு பொம்மைகள் அனைத்திலும் மேட் இன் சைனா வாசகம் இருந்தது.
            எஸ்.கே.யின் மகன் புகுந்து விளையாடியதில் வெகு சீக்கிரத்தில் அந்த பொம்மைகள் குப்பைப் பொருட்களாக ஆகின.
            அதைக் கொண்டு போய் 'தூய்மை இந்தியா' குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார் எஸ்.கே.
            அப்போது தைரியமாக குப்பைத் தொட்டியில் போட்ட எஸ்.கே. இப்போது பயந்து கொண்டிருக்கிறார், இதன் காரணமாக சீனாவுக்கும், இந்தியாவுக்கும் போர் வருமோ என்று.
            எஸ்.கே. சீனாவுக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்று தைரியம் கொடுத்து பத்தி எழுதிய தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...