31 Jul 2017

பிடித்தமான குறிப்பு

பிடித்தமான குறிப்பு
            எஸ்.கே. யார்?
            அவன் ஒரு மாயவாத எதார்த்த புனைவியலாளன்.
            அவன் முகவரி?
            யாருக்குத் தெரியும்.
            அவன் எப்படி இருப்பான்?
            எப்படி வேண்டுமானால் இருக்கலாம். அப்படி ஒருவன் இல்லாமல் கூட இருக்கலாம். அநேகமாக நீங்கள் கூட எஸ்.கே.வாக இருக்கலாம். நான் கூட எஸ்.‍கே.வாக இருக்கலாம். எல்லாம் இருக்கலாம்தான். இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
            காணாமல் போனவர்கள் பட்டியலில் கணக்கெடுத்து தேடிக் கூட பார்க்கலாம். எஸ்.கே. உங்கள் கையில் சிக்குவதோ, சிக்காமல் போவதோ உங்கள் முன் ஜென்ம புண்ணியம்.
            அது கிடக்கட்டும். இங்கு விசயம் அதுவல்ல. எஸ்.கே. எழுதிய குறிப்புகளில் பிடித்தமான ஒன்று -
            "முற்போக்கான எண்ணங்கள் தரும் தெளிவே அலாதியானதுதான். தன்னுடைய கருத்துகளை வெளியிட யாரும் அஞ்ச வேண்டியதில்லை!"

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...