31 Jul 2017

ஒரு வன்கொடுமையாளன் குறையட்டும்!

ஒரு வன்கொடுமையாளன் குறையட்டும்!
            மனம் ஆணி அறையும் ஒரு சுவரைப் போன்றதன்று. மனப்பாடம் என்ற பெயரில் நம் வருங்காலத் தலைமுறையை அதைத்தான் அறையச் செய்து கொண்டிருக்கிறோம்.
            சாதாரணமாகப் படித்தாலே அவர்கள் வாங்கப் போகும் மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்கள் வாங்குவார்கள். இது விசித்திரமாகத் தோன்றலாம். உண்மை அதுதான்.
            ஆக, செய்ய வேண்டியது என்பது எதுவுமில்லை. இயல்பாக இருப்பதே போதுமானது. சாதாரணமாகச் செய்வதே போதுமானது. இது படிப்புக்கு மட்டுமல்ல. எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.
            அநாவசிய முயற்சிகள், அதிகப்படியான முயற்சிகள் போன்றவை தேவையில்லாத பின்விளைவுகளை உண்டாக்குகின்றன.
            இயல்பாக இரு. இருப்பில் இரு. என்ன கிடைக்க வேண்டுமோ கிடைக்கும். அது உனக்கு ஏற்றதாகவும் இருக்கும். அதற்கு மாறாக சுற்றத்தைப் பார்த்து, அக்கம் பக்கத்தைப் பார்த்து பிடிவாதம் எனும் கயிற்றில் மனதைக் கட்டி ஆசைகளுக்கு நெய்யூற்றிப் பார்த்தால் நாம் பெற்ற பிள்ளைகளை நாமே வன்கொடுமைக்கு ஆளாக்கிய பழிக்கு ஆளாவதைத் தடுக்க முடியாது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...