மருந்து விசம்
"பூச்சி மருந்து அடிச்சாத்தான் பூச்சிக
சாகும்!" என்ற அப்பாவிடம், "சித்தப்பா மேல ஏன் பூச்சி மருந்தை அடிச்சீங்க?"
என்றாள் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சித்தப்பாவின் படத்தைக்
காட்டிய தாரணி.
*****
திருப்பம்
டாஸ்மாக்கிற்கு இடம் பார்க்கச் சென்ற அதிகாரிகள்
ஜீப்பைத் திருப்பிக் கொண்டு புறப்பட்டனர், குடிநீர் கேட்டு போராட்டம் நடக்கும் செய்தியைக்
கேட்டு.
*****
பிடித்தப் பாட்டு
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த
நாட்டிலே, சொந்த நாட்டிலே?" சீட்டியடித்த படியே பைக்கில் பறந்து கொண்டிருந்தான்
இன்றைய பணப்பட்டுவாடாவை முடித்த திருப்தியில் எலெக்சன் ஏஜென்ட் மருதமுத்து.
*****
No comments:
Post a Comment