18 May 2017

அமைப்பு குறித்தப் புரிதல்கள்


அமைப்பு குறித்தப் புரிதல்கள்
விடுமுறை நாளில்
வீடு வந்த மகன்
ஆர்வமோடு அப்பா
கிளிகள் வளர்ப்பதை
பார்த்த பின் சொன்னான்
"என்னை ஏன் ரெசிடென்சியல் ஸ்கூலில்
சேர்த்தீங்கன்னு புரியதுப்பா!"
*****

ஆசிர்வாதம்
காசைக் கொடுத்து விட்டு
யானையை ஆசிர்வதித்தது
குழந்தை.
*****

அந்த...
சற்றே விலகியிருந்த
மாராப்பைக் கவனித்து விட்டு
கூப்பிட்டு பிச்சையிடுகிறான்
அந்தப் பிச்சைக்காரிக்கு
நவநாகரிக உடையணிந்த
அந்த யுவன்.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...