11 Apr 2017

பருக்கை


பருக்கை
மென்று முழுங்காத
சோற்றுப் பருக்கை
எட்டிப் பார்க்கிறது
எடுத்த வாந்தியில்.
இதுதான் நீ தின்ற
லட்சணம் என...
செரிக்காது என
காரணம் சொல்லி
ஆசையாய்க் கேட்ட
புரோட்டாவைப் புறந் தள்ளி விட்டு
அம்மா கஞ்சி வைக்கத் தயாராகிறாள்.
கபகபவென்று பசிக்கும் வயிற்றுக்குள்
புரோட்டா தின்னும் ஆசைகள்.
*****

வண்ணம்
கொஞ்சம் கொஞ்சமாக
வண்ணமிழந்துப் போகும்
மருதாணி சொல்லும்
வாழ்க்கையை.
மீண்டும் வைக்க வேண்டும்
வண்ணமிழந்த வாழ்க்கைக்கு
வண்ணமேற்ற மருதாணி.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...