பேதம்
அது பாட்டுக்கு
வளர்ந்து கொண்டுதான்
இருக்கிறது
அது
மாவா
பலவா
தேக்கா
வேம்பா
புங்கையா
என்று பேதம் பார்ப்பதைச்
செய்பவன்தான்
மரம் நடுபவன் எனப்படுபவன்.
*****
அற்புதம்
"தயவு செய்து
விளம்பரம் செய்யாதீர்!"
அற்புதமான
விளம்பரமாகப் படுகிறதா
உங்களுக்கு?!
*****
No comments:
Post a Comment