11 Apr 2017

மனம்


மனம்
மேல்மனம், நடுமனம், ஆழ்மனம்
என்கிறார்கள்.
அதைப் புரிந்து கொள்ளும் மனம்
எந்த மனம்?
*****

காலம்
"கரண்டு காலத்திலுமா
விளக்கேத்தணும்?"
என்று கேட்டு முடிப்பதற்குள்
பூசையறையில்
ஏற்றி வைத்த தீபம்
எரிந்து கொண்டிருக்க,
போட்டு விட்ட ஸ்விட்சில்
எரிந்த மின் விளக்கு
பட்டென்று
அணைந்து போகிறது
மின்வெட்டில்.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...