12 Apr 2017

நன்றியின் சாவு


நன்றியின் சாவு
மிக்க நன்றியோடு
விசுவாச நேசத்தோடு
இரவு பகல் எந்நேரமும்
போட்டதை உண்டு
காவல் காத்த நாய்
கடைசியில்
முடிகொட்டி
சொரி வந்து
இழுக்குப் பட்டு
அய்யோ பாவம் என்று
இரங்கும் மனிதர்களின்றி
கவனிக்க நாதியின்றி
இறக்கிறது.
*****

கட்டுபாடு
பாகனுக்குக் கட்டுபட்ட
யானை
துதிக்கையைத் தூக்கி வைக்கிறது
குழந்தையின் தலை மேல்
பிரபஞ்சத்தின் பேரன்பிற்கு
கட்டுபட்டது போல்.
*****

No comments:

Post a Comment