கொள்வதும், கொல்வதும்
கீழே விழும்
மரத்தின் நிழலில்
உயிர் கொள்ளும்
மனிதன்,
வெட்டி வீழ்த்திய
மரத்தில் எத்தனையோ
உயிர்களைக் கொன்றவன்.
*****
கேள்விகள்
என்னோடு திருமணம் கைகூடாத
காதலி ஒருத்தி
டாஸ்மாக் முக்கம் அருகில்
எதிர்பாராத ஒரு சந்திப்பில்
கேட்டாள்,
"குடிக்கிறியா?"
"ம்!" என்றதும்
அவள் சொன்னாள்,
"அவனும் அப்படித்தான்!"
அவளுக்காகப் பரிதாபப்பட்ட
அந்த நொடியில்
அவள் கேட்டாள்,
"உன் பொண்டாட்டியை
அடிக்கிறீயா?"
*****
No comments:
Post a Comment